ஒருவர் வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டுமென்றால், அவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, 9-க்கு அதிபதி, சந்திரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
லக்னாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் பல வருடங் களாக ஒரே மாதிரியான வாழ்க்கையைதான் வாழ்ந்துகொண்டிருப்பார்.
ஜாதகத்தில் 11-க்கு அதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் கடுமையாக உழைத்தாலும், பல திறமைகளைக் கொண்டிருந்தாலும் நல்ல ஊதியம் கிடைக்காது. சாதாரணமாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்.
2-க்கு அதிபதி பாவகிரகத்துடத்துடன் இருந்தால் சரியான நண்பர்கள் இருக்கமாட்டார்கள். குடும்பத்திலேயே அவருக்கு ஆதரவிருக்காது. எந்த பாவ கிரகத்துடன் 2-க்கு அதிபதி இருக்கிறதோ, அந்த கிரகங்கள் அவருக்கு பெரிய அளவில் பிரச்சினைகளைக் கொடுக்கும். மிகுந்த திறமையுள்ளவராக இருந்தாலும், அவர் வளர்ச்சியே இல்லாமல் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருப்பார்.
4-க்கு அதிபதி நீசமடைந்த ஜாதகர் சந்தோஷமாக இருக்கமாட்டார்.
அவரது சம்பாத்தியம் தங்காமல் வீணாக செலவாகிவிடும். மிகச்சாதாரணமாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்.
5-க்கு அதிபதி 6, 8-ல் இருந்தால், எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் பாராட்டு கிடைக்காது புகழ் வரும்போது, ஏதாவது தடையுண்டாகும்.
ஜாதகத்தில் 7-க்கு அதிபதி நீசம் அல்லது அஸ்தமனமாக இருந்தால், அவர் செய்யும் தொழிலில் புகழ் கிடைக்காது. தொழிலுக்கேற்ற வருமானம் வராது. சராசரி வாழ்க்கையே வாழ்ந்துகொண்டிருப்பார்.
9-ல் ராகு இருந்தால், 36 வயதுவரை சாதாரண வாழ்க்கையே இருக்கும்.
ராகுவும் சனியும் லக்னத்தில் இருந்து, சூரியன் நீசமடைந்தால், கடுமையாக உழைத்தும் நிறைய தோல்விகளையே சந்திப்பார். எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பார்.
லக்னத்தில் நீசச் செவ்வாய், 4-ல் நீச சூரியன் இருந்தால், அந்த ஜாதகரின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும். கடுமையாக உழைத்தும், எதிர்பார்க்கும் அளவுக்கு பணவசதி இருக்காது.
லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, சந்திரன் நீசமாக இருந்தால், அவர் கடுமையாக உழைப்பார். ஆனால், தேவையற்றதைப் பேசி பகைவர்களை உண்டாக்கிக்கொள்வார். அதனால், அவரை யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.
12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், அவர் பேசக்கூடாததைப் பேசி, தொழில் செய்யுமிடத்தில் பிரச்சினையை உண்டாக்கிக்கொள்வார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரால் சராசரி வாழ்க்கையே வாழமுடியும்.
லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 4-க்கு அதிபதி நீசமாக இருந்து, 11-க்கு அதிபதி தேய்பிறைச் சந்திரனாக இருந்தால் அவர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்வார்.
லக்னாதிபதி விரய ஸ்தானாதிபதியாக லக்னத்தில் இருந்து, 6-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால் அவர் பெரிய திறமை சாலிலியாக இருப்பார். செய்யும் தொழிலிலில் புகழ் கிடைக்கும். ஆனால், குடும்பத் தினரும் நண்பர்களும் அவருக்குத் தொல்லையாக இருப்பார்கள். அவர் எந்த நல்ல செயல்களைச் செய்தாலும் பாராட்டமாட்டார்கள். ஒரு சாதாரண மனிதராகவே அவர் எப்போதும் இருப்பார்.
லக்னத்தில் சூரியன், சனி, புதன், 2-ல் செவ்வாய் இருந்தால் கடுமையாக உழைத்தாலும் எந்தவிதப் பயனும் கிடைக்காது. சாதாரண மனிதராகவே வாழ்வார்.
4-ல் சூரியன், 5-ல் நீச குரு, 6-ல் செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவர் கடுமையாக உழைப்பார். அவருடைய விரோதிகள் சூனியம் செய்வார்கள். அதன்மூலம் அவரின் உடல்நலம் கெடும். மருத்து வத்திற்கு செலவு செய்து, வாழ்க்கையை ஓட்டுவதற்கே சிரமப்படுவார்.
ஒருவர் வாழும் வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப்பட்டிருந்தால், அங்கு வாழ்பவர் சாதாரண வாழ்க்கையையே வாழமுடியும். வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு அல்லது பூமிக்கு அடியில் கழிவுநீர்த் தொட்டி இருந்தால், உடல்நலம் கெடும். திறமை யிருந்தும், பல தோல்விகளைக் கண்டு, எந்தவித உயர்வுமில்லாமல் வாழ்க்கை இருக்கும்.
வீட்டின் மத்தியப் பகுதியில் கிணறு, தென்மேற்கு திசையில் கழிவறை இருந்தால் அந்த வீட்டில் சந்தோஷம் இருக்காது. ஜாதகர் முன்னேற்றமே இல்லாத சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்.
உயர்வடைய செய்யவேண்டிய பரிகாரங்கள்
தினமும் சூரியன் உதயமாவதற்குமுன்பு எழுந்து, குளித்து முடித்து சூரியனை வழிபடவேண்டும். நீரில் குங்குமம், சர்க்கரை கலந்து அதை சூரியனுக்கு வார்க்க வேண்டும்.
ஆதித்திய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிப்பது நல்லது.
தெற்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று, நான்குமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும்.
வருடத்திற்கொரு முறை குலதெய்வத்தை வழிபடவேண்டும்.
தன் லக்னாதிபதி, 5-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
செல்: 98401 11534